
அனைத்து வைத்தியர்களும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
களுத்துறை மாவட்ட வைத்தியசாலை வளாகத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை இடம்பெற்ற அமைதியற்ற சூழல் காரணமாக இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.
அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தினரால் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிரான மனுவொன்றில் பொதுமக்கள் கையெழுத்திடும் நடவடிக்கை களுத்துறை மாவட்ட வைத்தியசாலை வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது அங்கு வருகை தந்த களுத்துறை நகர மேயர் அமீர் நஜீல் வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு வௌியிட்டபோது அமைதியின்மை ஏற்பட்டது. இதனை கட்டுப்படுத்தி பொலிஸார் களுத்துறை நகர மேயர் உள்ளிட்டோர் மற்றும் களுத்துறை மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளருடன் கலந்துரையாடினர்.
இதனிடைய களுத்துறை மாவட்டத்தின் அரச வைத்தியசாலைகளில் பணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
