
எதனையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லையென கூறி தி.மு.க சார்பில் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இன்று (சனிக்கிழமை) காலை சென்னை, பிராட்வேயில் தி.மு.க சார்பில் முன்னெடுக்ப்பட்ட பேரணி முத்தியால்பேட்டை பொலிஸ் நிலையத்தை சென்றடைந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து நீரற்ற குடங்களை ஏந்தி, 3000க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் தி.மு.க.வி.னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த போராட்டத்தில் திருநெல்வேலி மக்களவை உறுப்பினர் கனிமொழி, மத்திய சென்னை மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சேகர்பாபு, தாயகம் கவி, மாவட்ட தி.மு.க செயலாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
இதன்போது போராட்டத்தில் பங்கேற்றிருந்த கனிமொழி கூறியுள்ளதாவது, தமிழகத்தில் பல மணித்தியாலங்கள் காத்திருந்து, ஒரு குடம் தண்ணீர் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. தண்ணீர் எங்கே உள்ளது என்பது தமிழக முதல்வருக்கு மட்டுமே தெரியும்” என கூறியுள்ளார்.
மேலும் போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பியதுடன் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் நிலவும் கடும் தண்ணீர் பிரச்னையை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
