இலவச மடிக்கணனிகள் வழங்கக் கோரி ஈரோடு வீரப்பன் சத்திரம் அரசு பெண்கள் மேல்நிலை பாடசாலை மற்றும் மாணிக்கம்பாளையம் ஆண்கள் மேல்நிலை பாடசாலையின் முன்னாள் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த போராட்டம் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றுள்ளது.
இதன்போது கடந்த ஆண்டு கல்வி கற்ற மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கவில்லை என்றும், ஆனால் இவ்வாண்டு கல்வி கற்கும் மாணவர்களுக்கு வழங்கப்படுவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
சுமார் 100இற்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், குறித்த பகுதியில் போக்குவரத்திற்கும் தடையேற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் இது குறித்து முதன்மை கல்வி அதிகாரியான பாலமுரளி மாணவர்களுடன் தொடர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன





