
நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி விவாதத்திற்கு எடுத்துகொள்ளப்படும் என்றும், அதற்கான நிகழ்ச்சி நிரல் எதிர்வரும் 28ஆம் திகதி வெளியிடப்படும் எனவும் சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் இன்று (திங்கட்கிழமை) தலைமை செயலகத்தில் இடம்பெற்றது.
குறித்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஜுன் மாதம் 28ஆம் திகதி முதல் ஜுலை மாதம் 31ஆம் திகதி வரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தினமும் ஒவ்வொரு துறை வீதம், மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும்.
இவ்வாறாக விடுமுறை தினங்கள் தவிர்ந்த ஏனைய 23 நாட்களும் பேரவை கூட்டம் இடம்பெறும். எல்லா நாட்களிலும் கேள்வி நேரமும் இருக்கும் என அவர் தெரிவித்தார்.
