
"நிறங்களை உதிர்க்கும் இரவுகள் " என்ற கவிதை நூலை தந்த திருகோணமலையைச் சேர்ந்த கவிதாயினி ஷகி அவர்கள் நேற்று மாலை திருமலையில் காலமானார். அண்மைக்காலமாக புற்று நோயினால் பாதிக்கப்பட்டிருந்தாலும் தனது எழுத்தை விடாமல் தொடர்ந்து கொண்டிருந்தவர் அவர்.
ஈழத்தின் குறிப்பிடக்கூடிய பெண் கவிஞராகவும் பெண்ணிய செயற்பாட்டாளராகவும் திகழ்ந்த அவருக்கு எமது அஞ்சலிகள்.