
இதன்படி சென்னை ஸ்டான்லி வைத்தியசாலையிலும் இன்று (திங்கட்கிழமை) மனித சங்கிலி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் அவசரகால சிகிச்சைப்பிரிவு வழமை போன்று செயற்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அரச வைத்தியசாலையில் பயிற்சி வைத்தியர் ஒருவரை நோயாளியின் உறவினர் ஒருவர் தாக்கியதை அடுத்து குறித்த வைத்தியர் உயிரிழந்தார்.
இந்நிலையில் வைத்தியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி மேற்கு வங்க மாநிலத்தில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டத்தை சுமூகநிலைக்கு கொண்டுவருவதற்கு மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வரான மம்தா பானர்ஜி சமரசபேச்சுவார்த்தைகளில் ஈடுப்பட்டிருந்தார்.
இருப்பினும் குறித்த பேச்சுவார்த்தை தோல்வியை தழுவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
