கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், “இந்த நாட்டில் நிலவிவரும் நிலைமைகளை நினைத்து நாம் மிகவும் கவலையடைகிறோம்.
71 வருடங்களுக்கு முன்னர் சுதந்திரம் பெற்றுக்கொண்ட ஒரு நாட்டில் இதனையும் விட பல மடங்காக அபிவிருத்திப் பணிகள் முன்னெடுத்திருக்க வேண்டும்.
மக்களுக்கு இதைவிட வாழ்வதற்கான சூழல் சிறப்பானதாக இருந்திருக்க வேண்டும். மனசாட்சிபடி நாம் சிந்திக்கும்போது, நாட்டில் பல்வேறு குழப்பங்கள் இடம்பெற்றுள்ளது என்பதை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.

இறுதியாக நடைபெற்று முடிந்தத் தேர்தலில் எந்தவொருக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மைக் கிடைக்கவில்லை. இதனை மக்கள் வழங்கிய எச்சரிக்கையாகவே நாம் கருதுகிறோம்.
அதாவது, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விடயத்திற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என்ற செய்தியே இதன் ஊடாக வெளியிடப்பட்டது.
ஆனால், துரதிஷ்டவசமாக இதனை நடைமுறைப்படுத்தக்கூட முடியாத நிலையில்தான் இன்று நாம் காணப்படுகிறோம்.
ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்குப் பின்னர் பாடசாலைகளை திறப்பதற்கும் அரசாங்கத்திலும் எதிர்க்கட்சியிலும் இருவேறுக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
இவ்வாறு அரசியல் பிளவுடன்தான் அனைவரும் பயணித்துக்கொண்டிருக்கிறோம். இது ஆரோக்கியமான ஒன்றல்ல. இப்போதுள்ள பிரச்சினைகளை எதிர்காலத்திற்கும் கொண்டுசெல்லக்கூடாது.
எமது நாட்டின் அடுத்த சந்ததியினர் ஐக்கியமாக வாழும்வகையில், இப்போதுள்ள பிரச்சினைகளை இப்போதே தீர்க்க நாம் முயற்சிக்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
