
து அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவிக்கையில், “லட்சத்தீவை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் கிழக்கு, மத்திய அரபுக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது.
குறித்த தாழ்வு மண்டலமானது அடுத்த 12 மணிநேரத்தில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகுவதுடன், அடுத்த 24 மணித்தியாலங்களில், வடமேற்கு திசைநோக்கி நகர்ந்து புயலாகவும் மாறக்கூடும்.
இதன்காரணமாக மீனவர்கள் அடுத்த மூன்று நாட்களுக்கு அரபிக்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க செல்லவேண்டாம்” என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை கேரளா மற்றும் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளதுடன், கடந்த 24 மணிநேரத்தை பொருத்தவரையில், கன்னியாகுமரி மாவட்டம் குளித்தலை பகுதியில் 7 சென்றிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
