
இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் காரணமாகவே இந்த கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது 18 வயதான இளைஞன் ஒருவனே காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் குறித்த மோதல் சம்பவத்துடன் தொடர்படையவர்களை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, அண்மைக்காலமாகவே கனடாவின் பல பகுதிகளிலும் இவ்வாறான மோதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
