
வவுனியா, தோணிக்கல் ஐக்கிய விளையாட்டுக் கழகத்திற்கு கம்பரலிய வேலைத்திட்டத்தில் அமைக்கப்பட்ட அலுவலகம் மற்றும் கடினப் பந்து பயிற்சிக் கூடத்தினை திறந்து வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அங்கு கருத்துத் தெரிவித்த அவர், “யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த அத்துரலிய ரத்ன தேரர் மிகவும் மோசமான கருத்துக்களை மக்களைக் கவர்வதற்காக பேசி முடித்திருக்கின்றார். தமிழ் மக்கள் புத்தர் கோவிலை விரும்பவில்லை என்றால் தாமே எடுத்துவிடுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.
இது வேடிக்கையாக இருக்கின்றது. நாடாளுமன்றத்தில் எமது உறுப்பினர்கள் எமது பாரம்பரிய இடமான கன்னியா பிள்ளையார் ஆலய வளாகத்தில் புத்த கோவில் அமைக்கப்படுவது தொடர்பாகவும், முல்லைத்தீவு நீராவியடியில் பிள்ளையார் ஆலயத்தில் புத்தர் கோவிலை அமைப்பது தொடர்பாகவும் தமது ஆட்சேபனையையும் பல தடவைகள் தெரிவித்திருக்கின்றார்கள்.
இது ரத்ன தேரருக்கு தெரியாதா? அல்லது தெரியாதது மாதிரி உள்ளாரா என்பது வேடிக்கையாகவுள்ளது. புத்தர் ஞானம் பெற்ற நாளான இன்றுகூட நீராவியடியில் சிங்களவர்கள் புத்தல் கோவில் அங்கு வரவேண்டும் என போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
ரத்னதேரர் உண்ணாவிரத்திற்கு பின்னர் தமிழ் மக்கள் தன்னுடைய பேச்சைக் கேட்பார்கள் என நினைக்கின்றார். அவர் உடனடியாக செய்யவேண்டிய வேலை இந்த இரண்டு புத்தர் கோவில்களையும் அகற்ற வேண்டும். உண்மை பேசும் மதகுருவாக இருந்தால் எங்கள் மக்களுடைய இரு பிரதேசங்களையும் நல்லிணக்க அடிப்படையில் விடுவிக்க வேண்டும்.
எமது மக்கள் பாராம்பரியமாக புனிதத்துவத்துடன் வழிபடுகின்ற இடங்களை ரத்ன தேரர் உண்மையில் புத்த மதத்தினை பின்பற்றுகின்றவராக, அதன் அடிப்படையோடு செயற்படுகின்றவராக இருந்தால் அவர் தன்னுடைய கவனத்தை செலுத்தி அந்த இடங்களை மீள எமது மக்களிடம் கையளிக்கவேண்டும்” என்று தெரிவித்தார்.
