
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்று வருகின்றது.
இதில் வாக்களித்தப்பின் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “நடிகர் சங்கத்தின் எனது ஜனநாயகக் கடமையை ஆற்றிவிட்டேன். நடிகர் சங்கம் என்பது ஏறக்குறைய 2000 பேர் அங்கத்துவம் வகிக்கக் கூடிய ஒரு சிறிய அமைப்புதான்.
தமிழ்நாட்டை பொறுத்தவரையில் குடிநீர் பிரச்சினை பெருமளவாக காணப்படுகின்றது. இதற்காக மக்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
அந்தவகையில் குளம் தூர்வாருதல், மழைநீர் சேகரிப்பு திட்டம் குறித்தும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
