
உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த 31 வயதான குறித்த நபருக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகள் மறுக்கப்பட்டிருந்ததை அடுத்தே அவர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவத்துடன் சேர்த்து 62 அகதிகள் தனக்கு தானே ஊறுவிளைவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், இவ்வாறு 95 சம்பவங்கள் இதுவரையில் பதிவாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள Refugee Action Coalition அமைப்பின் பேச்சாளர் Ian Rintoul, “சுமார் 6 வருடங்களாக கொடிய துயரை அனுபவித்து வரும் இந்த அகதிகளை அவுஸ்ரேலியாவிற்குள் கொண்டுவருவது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறியுள்ளார்.
அத்துடன் அவர்கள் மருத்துவ காரணங்களுக்காக அவுஸ்ரேலியாவிற்குள் பிரவேசிப்பது குறித்த சட்டத்தை திருத்துவதில் அரசாங்கம் தீவிரமாக செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
