
சென்னை– பெரியார் திடலில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசிய மு.க.ஸ்டாலின் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மத்தியில் அங்கம் வகிக்காத நிலையில் 37 தி.மு.க.நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன செய்து விடுவார்கள் என சிலர் கேட்டனர்.
ஆனால் நாம், நாடாளுமன்ற பதவி ஏற்பதற்கு முன்பதாகவே ஹிந்தி கட்டாயமென்ற புதிய கல்வி கொள்கைளை எதிர்த்து வெற்றி கண்டுள்ளோம்.
மேலும் தென்னக ரயில் நிலையத்தில் தமிழே பேசக்கூடாதென அனுப்பி வைத்த சுற்றறிக்கையை கூட திரும்பப் பெற வைத்தோம்” என மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
