
இன்று (செவ்வாய்க்கிழமை) அவர் இந்த அறிவிப்பினை விடுத்ததாக ஐ.ஆர்.ஐ.பி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் கடந்த கால அணு ஆயுதப் பயன்பாட்டினையும் ஈரான் மீதான இராணுவத் தாக்குதலை நிறுத்தியமை தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்த கருத்தினையும் அவர் இங்கு சுட்டிக்காட்டினார்.
மேலும் “150 பேரைப் பற்றி நீங்கள் உண்மையில் கவலைப்பட்டீர்களா? அணு ஆயுதத்தால் எத்தனை பேரைக் கொன்றீர்கள்? இந்த ஆயுதங்களால் எத்தனை தலைமுறைகளை நீங்கள் அழித்துவிட்டீர்கள்?” என மொஹமட் ஜவாத் ஸரீஃப் கேள்வியெழுப்பினார்.
அத்தோடு எம்முடைய மத கொள்கையின் பிரகாரம் நாம் ஒருபோதும் அணு ஆயுதத்தைத் கையாள மாட்டோம் என அவர் கூறினார்.
