முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் பொரிஸ் ஜோன்சன் சிறந்த தலைவர் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.தெரேசா மே அடுத்த மாதம் பதவி விலகப்போவதாக அறிவித்த நிலையில், கொன்சர்வேட்டிவ் கட்சியின் அடுத்த தலைவர் பதவிக்கு போட்டி ஆரம்பமாகியுள்ளது.
முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் பொரிஸ் ஜோன்சன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெரிமி ஹன்ட், சர்வதேச மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் ரோரி ஸ்டூவர்ட், சுகாதாரத்துறை அமைச்சர் மத்யூ ஹென்கொக், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மைக்கல் கோவ், பிரெக்ஸிட் விவகார முன்னாள் அமைச்சர் டோமினிக் ரொப், ஓய்வூதியத்துறை முன்னாள் அமைச்சர் எஸ்தர் மெக்வி, நாடாளுமன்றத்துக்கான முன்னாள் அரசாங்கப்பிரதிநிதி அண்ட்ரியா லெட்ஸம் உள்ளிட்ட 12 பேர் அந்த பதவிக்காக போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இவர்களில், பிரெக்ஸிற்றுக்கு ஆதரவான பிரசாரத்தை முன்னின்று நடத்திய வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சர் பொரிஸ் ஜோன்சன் அடுத்த பிரதமராவதற்கான வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்தநிலையிலேயே பொரிஸ் ஜோன்சன் சிறந்த தலைவர் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக அவருக்கு அமெரிக்க ஆதரவு இருக்கிறது என நம்பப்படுகிறது.





