
பிரதேச சபைக்குட்பட்ட களுதாவளை பகுதியில் கம்பெரலிய திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட மூன்று வீதிகள் மக்களின் பாவனைக்காக இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறந்துவைக்கப்பட்டது.
அரசினால் முன்னெடுக்கப்பட்டு வரும் 48 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான நாடளாவிய ரீதியிலான குறித்த அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இந்த மூன்று கொங்கிறிட் வீதிகளும் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு மக்கள் பாவனைக்காக திறந்துவைத்தார்.
அந்தவகையில், களுதாவளை பாரதி வீதி, தேவாலய 3 ஆம் குறுக்கு வீதி மற்றும் வேம்படி வீதி ஆகியன 60 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபையின் தவிசாளர் ஞா.யோகநாதன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரனின் பரிந்துரையில், நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனின் நிதி ஒதுக்கீட்டில் இவ்வீதிகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
