மொழிக்கு எதிரான கொள்கையை மத்திய அரசு கொண்டிருந்தாலும், இல்லாவிட்டாலும் மொழி திணிப்பை தி.மு.க எதிர்க்கும் என்று சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.அ.தி.மு.கவில் உட்கட்சி பிரச்சினை இப்பதை சுட்டிக்காட்டிய அவர், தமிழகத்திற்கு அக்கட்சி பாதிப்பாகவே காணப்படுகிறது என்றும் குற்றிப்பிட்டுள்ளார்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், நாடாளுமன்றத்தில் எத்தனை பேர் இருந்தாலும் தமிழக மக்களின் உரிமைக்காக தி.மு.க தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை மத்திய அரசின் புதிய தேசிய கல்வி கொள்கைக்கான வரைவு திட்டம் நேற்று வெளியிடப்பட்டது.
குறித்த திட்டத்தில், ஹிந்தி பேசாத மாநிலங்களில் அம்மொழியை பயிற்றுவிக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





