
கூறப்படும் படுகொலைகள் குறித்து மேல் நீதிமன்ற விஷேட விசாரணைகளை ஆரம்பிக்க மூவர் கொண்ட சிறப்பு குழாமை நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சட்ட மா அதிபரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான தப்புல டி லிவேரா, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவிடம் இவ்வாறு கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் சட்டத்தின் 450 (4) ஆம் உறுப்புரை மற்றும் நீதிமன்ற கட்டமைப்பு சட்டத்தின் 12(2) ஆம் அத்தியாயத்துக்கு அமைய இந்த கோரிக்கையை சட்ட மா அதிபர் பிரதம நீதியரசரிடம் முன்வைத்துள்ளதாக சட்ட மா அதிபரின் செய்தித் தொடர்பாளர் அரச சட்டவாதி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.
பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் மோசஸ் நியோமால் ரங்கஜீவ, மெகசின் சிறைச்சாலையின் அப்போதைய சிறை அத்தியட்சர் லமாஹேவகே எமில் ரஞ்சன், தற்போது தலைமறைவாகியுள்ள சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவின் மிதுவகே இந்திக சம்பத் ஆகியோருக்கு எதிராகவே விசாரணைகளுக்கு மூவர் கொண்ட சிறப்பு நீதிமன்றை அமைக்குமாறு சட்ட மா அதிபர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த படுகொலைகள் குறித்து, அன்றிலிருந்து 5 வருடங்கள் உரிய விசாரணைகள் இடம்பெற்றிருக்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ள சட்ட மா அதிபர், 2017 ஆம் ஆண்டே சி.ஐ.டி. ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும் 2018ஆம் ஆண்டின் இறுதி காலப் பகுதியில் விசாரணைக் கோவை சட்ட மா அதிபருக்கு பாரப்படுத்தப்பட்டதாகவும் சட்ட மா அதிபரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
