
உருவாக்கும் நோக்கத்துடன் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பொம்பியோ சவுதி அரேபியா விஜயம் செய்துள்ளார்.
அமெரிக்காவின் ஆளில்லா விமானமொன்றை கடந்த வாரம் ஈரான் சுட்டு வீழ்த்தியதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே நிலவிவந்த பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
ஈரானின் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவால் ஏற்பாடு செய்யப்பட்ட தாக்குதல், இறுதி நிமிடத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்-ஆல் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் சவுதி விஜயம் செய்துள்ள பொம்பியோ சவுதி அரசர் சல்மான் மற்றும் இளவரசர் மொஹம்மட் பின் சல்மான் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
சவுதிக்கான விஜயத்தைத் தொடர்ந்து ஈரானுக்கு எதிரான கூட்டணிக்கு ஆதரவைப் பெறும் நோக்கத்துடன் ஐக்கிய அரபு ராச்சியத்துக்கும் பொம்பியோ விஜயம் செய்யவுள்ளாரென தெரிவிக்கப்பட்டுள்ளது.
