LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, June 13, 2019

அனல் பறக்கும் ‘சாஹோ’ திரைப்படத்தின் டீசர் வெளியானது

சுஜீத் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகிவரும்
‘சாஹோ’ திரைப்படத்தின் டீசர் இன்று (வியாழக்கிழமை) வெளியாகியுள்ளது.

இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பொலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடித்துள்ளார். நீல் நிதின் முகேஷ், லால், அருண் விஜய், வெண்ணிலா கிஷோர், மகேஷ் மஞ்சுரேகர், ஜாக்கி ஷராஃப், சங்கே பாண்டே, மந்திரா பேடி மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

அதிரடி ஆக்ஷன் திரைப்படமான ‘சாஹோ’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் சுமார் 300 கோடி ரூபாய் பொருட் செலவில் உருவாகிவருகின்றது.

தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இப்படத்தின் படப்பிடிப்புக்கள் அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ளதாகவும் இதன்போது ஷ்ரத்தா கபூர் மற்றும் பிரபாஸ் இடையேயான ரொமாண்டிக் பாடல் காட்சி படமாக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

இத்திரைப்படம் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 15ஆம் திகதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7