
ம் மற்றும் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடுபவர்கள் குளத்தில் நீர் இன்மையினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
வவுனியா பெரிய நீர்ப்பாசன குளமான மூனாமடு குளத்தினை நம்பி 40 பங்காளர்கள் 240 ஏக்கர் பெரும் போக நெற்செய்கையினையும் 30 ஏக்கர் சிறுபோக நெற்செய்கையினையும் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில் 2019ஆம் ஆண்டிற்கான சிறுபோக நெற்செய்கைக்காக மூனாமடு குளத்தினை நம்பி 30 ஏக்கர் வரை நெற்செய்கையினை மேற்கொள்ளலாம் என தீர்மானம் எடுக்கப்பட்டது. எனினும் மூனாமடு விவசாயிகளினால் எதிர்பார்க்கப்பட்ட அளவை விட மேலதிகமாக 10 ஏக்கர் வரை அதிகரித்து தற்போது 40 ஏக்கர் வரை சிறு போக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இருந்தபோதும் 40 ஏக்கர் சிறுபோக நெற்செய்கைக்காக குளத்தின் நீர் போதாமையாலும் விவசாயிகளினால் நீர் இறைக்கும் இயந்திரம் மூலம் குளத்தில் இருந்து நீரினை நெல் வயலுக்குப் பயன்படுத்தியமை காரணமாகவும் குளத்து நீர் வற்றி குளத்தில் உள்ள மீன்கள் பெருமளவில் இறந்து மிதக்கின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
மேலும் இறந்து மிதக்கும் மீன்களால் அப்பகுதி எங்கும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார பிரச்சினைகளும், தொற்று நோய்களும் பரவுவதற்கான அபாய நிலையும் ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக இக்குளத்தினை நம்பி நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களும் தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அத்துடன் எதிர்பார்க்கப்பட்ட ஏக்கர் நெற்செய்கையை விட அதிகமாக இம்முறை நெற்செய்கையில் ஈடுபட்டமையினால் 40 பங்காளர்களைக் கொண்ட மூனாமடு விவசாயிகளின் வாழ்வாதாரமும் தற்போது பாதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் இதற்கு அரச அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பதுடன் இறந்து மிதக்கும் மீன்களை அழிப்பதற்கான நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ளுமாறு விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
