
பெர்ணான்டோவிற்கு எதிராக குற்றவியல் மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபருக்கு இவ்வாறு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவம் குறித்து ஆராய்வற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசேட விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கைக்கு அமையவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது தனது கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றாமை குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர், பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்திருந்தார்.
பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ தனது பதவியை ஏப்ரல் 25 ஆம் திகதி இராஜினாமா செய்த நிலையில், ஏப்ரல் 29 ஆம் திகதி பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
