
ராக திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், நடிகருமான பாரதிராஜா போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சென்னை வடபழனியில் இயக்குநர்கள் சங்கத்தின் பொதுக்குழு இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இயக்குநர்கள் சங்கத்தின் தலைவராக பாரதிராஜாவை நியமிக்கப் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதன்போது பாரதிராஜாவைத் தலைவராக்கும் தீர்மானத்துக்குப் பொதுக்குழு உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்துள்ளார்கள். இதையடுத்து, தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவராக பாரதிராஜா போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2017 ஜூலை மாதம் விக்ரமன் தலைமையிலான நிர்வாகிகளின் பதவிக் காலம் முடிவுக்கு வந்ததையடுத்து புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான அடுத்து தேர்தல் நடத்துவது குறித்து பொதுக்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையிலேயே தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவராக பாரதிராஜா போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தல் நடைபெற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.
