தி வேட்பாளர் தொடர்பாக இறுதி முடிவுக்கு வரவில்லை என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் அமரசேன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர் தொடர்பாக தகுந்த நேரத்தில் கட்சி பரிந்துரை செய்யும் என்றும் கூறினார்.
கட்சிக்குள் வேட்பாளருக்கு பஞ்சமில்லை என கூறிய அவர், அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட பல வலுவான, பிரபலமான தலைவர்கள் உள்ளனர் என்றும் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை பொதுஜன பெரமுன ஐக்கிய தேசிய கட்சியின் நகர்வுகள் பற்றி அக்கறை செலுத்தாமல் தங்கள் உறுப்பினர்கள் தொடர்பாக அதிகம் கவனத்திற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து விரைவில் ஒரு அறிவிப்பு வெளியாகும் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துவந்தது.
இந்நிலையில் தற்போது எதிர்க்கட்சியின் அறிவிப்பினை அடுத்தே தனது முடிவை வெளியிடும் என ஐ.தே.க. திட்டமிட்டுள்ளமை துஷார இந்துனிலின் கருத்தில் இருந்து புலப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
