தீ விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இன்று (வெள்ளிக்கிழமை) காலை வழமைப்போன்று பட்டாசு தயாரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது அக்கட்டத்தின் 69ஆவது அறையில் பணியிலிருந்த இருவர் அணுகுண்டு தயாரிக்க தேவையான மருந்துக்களை செய்து கொண்டிருக்கும்போது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட உராய்வினால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.
குறித்த சம்பவத்தில் உயிரிழந்த ஊழியர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக சிவகாசி வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணையை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
சிவகாசி பகுதியைச் சேர்ந்த ஜெய்சங்கர் என்பவருக்கு சொந்தமான குறித்த பட்டாசு ஆலையில் 70க்கு மேற்பட்ட அறைகள் காணப்படுவதுடன் 300க்கும் மேற்பட்டே ஊழியர்கள் பணி புரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






