விபத்துக்குள்ளானதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் இருந்து சிமெந்து மூட்டைகளை ஏற்றிக்கொண்டு கூலித் தொழிலாளர்களுடன் லே பகுதிக்கு சென்ற லொறியே இன்று (ஞாயிற்றுக்கிழமை) இவ்வாறு விபத்துக்குள்ளானது.
குறித்த லொறி லமயுரு பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டுவிலகி ஆழமான பள்ளத்தாக்கில் வீழ்ந்துள்ளது.
இதன்போது, லொறி கடுமையாக உருக்குலைந்ததுடன், அதில் இருந்த சிமெந்து மூட்டைகளும் பள்ளத்தாக்கில் சிதறின.
இந்த விபத்தில், லொறியின் இடிபாடுகளுக்குள் சிக்கி 9 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் பெண்கள் மற்றும் சிறுவர்களும் அடங்குவர் என்பதுடன் உயிரிழந்தவர்கள் அனைவரும் 2 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து லொறி சாரதி அங்கிருந்து தப்பியோடியுள்ளதுடன், இவ்விபத்து குறித்த மேலதிக விசாரணையை காஷ்மீர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
