குறைபாடு உள்ள பாகங்கள் பொருத்தப்பட்டிருக்கலாம் என்று அமெரிக்க மத்திய விமானப் போக்குவரத்து அமைப்பு (Federal Aviation Administration) தெரிவித்துள்ளது.
300 க்கும் மேற்பட்ட போயிங் 737 மக்ஸ் ரக விமானங்களிலும் பழைய 737 ரக விமானம் ஒன்றிலும் இந்தப் பிரச்சினை கண்டுபிடிக்கப்பட்டது.
விமானங்கள் புறப்படுவதற்கும், தரையிறங்குவதற்கும் உதவக்கூடிய முக்கிய பாகத்தில் இந்த குறைபாடு கண்டறியப்பட்டுள்ளது.
விமானத்தின் இறக்கைகளில் குறித்த பாகம் பொருத்தப்பட்டிருக்கும் என்பதுடன். அந்தப் பாகங்கள் உடனடியாக மாற்றப்பட வேண்டும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
அதேவேளை, கடந்த வருடங்களில் இந்த வகையான விமானங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளானதன் காரணமாக அதன் பாவனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.






