எதிரான அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பான விசாரணை யூலை 5 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த மனு உச்ச நீதிமன்ற நீதியரசர்களான எஸ்.பிரசன்ன, ஜயவர்தன, மார்டு என்.பி. பெர்னாண்டோ, எஸ். துரைராஜா ஆகியோர் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது இந்த விடயம் தொடர்பாக பாதுகாப்பு செயலாளரிடம் இருந்து அறிவுறுத்தலைப் பெற கால அவகாசம் வேண்டும் என்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றில் கேட்டுக்கொண்டார்.
அதன்படி பாதுகாப்புச் செயலாளருக்கு பதிவாளர் மூலம் அறிவிப்பு அனுப்பும்படி நீதியரசர்கள் கேட்டுக் கொண்டனர்.
குறித்த மனு காமினி வியங்கொட மற்றும் டொக்டர் பாக்கியசோதி அகியோரினால் தாக்கல் செய்யப்பட்டது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை அடுத்து நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளை கட்டுப்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
