தொடர்பாக முன்னாள் ஒன்ராறியோ மாகாண பொலிஸ் சார்ஜென்ட் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குறித்த முன்னாள் பொலிஸ் சார்ஜென்ட்க்கு 45 நாட்கள் வீட்டு காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு விசாரணை நேற்று (வியாழக்கிழமை) கிச்சினர் கோர்ட்ரூம் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவை நீதிபதி பிறப்பித்துள்ளார்.
இந்த சம்பவம் கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13 ஆம் திகதி அன்று நடைபெற்றது என்றும் இதன்போது குறித்த பொலிஸ் அதிகாரியின் கடமை நேரம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த சம்பவத்திற்கு கடுமையாக கண்டனம் தெரிவித்த நீதிபதி அவரை 45 நாட்கள் வீட்டு காவலில் வைக்க உத்தரவிடப்பட்டார்.






