
பொரிஸ் ஜோன்சன் அல்லது ஜெரமி ஹண்ட் ஆகிய இருவரில் ஒருவர் பிரித்தானியாவின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்படவுள்ளனர்.
160000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பங்கெடுக்கும் கொன்சர்வேற்றிவ் கட்சியின் தலைமைத்துவப் போட்டிக்கான அஞ்சல் வாக்குப்பதிவு ஜூலை 22 ஆம் திகதி நிறைவடையவுள்ளது.
இதைத் தொடர்ந்து இப்போட்டியில் வெற்றி பெற்று பிரித்தானிய பிரதமராக பதவியேற்பவர் ஜூலை 23 ஆம் திகதி அறிவிக்கப்படுவாரென கொன்சர்வேற்றிவ் கட்சி அறிவித்துள்ளது.
