
ஜப்பானின் ஒசாகா நகரில் ஜூன் 28 மற்றும் 29-ஆம் திகதிகளில் ஜி-20 நாடுகளின் உச்சி மாநாட்டு நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் சந்தித்துப் பேச இருக்கின்றனர்.
பிரிக்ஸ் நாடுகள் உறுப்பினர்களான பிரேசில், ரஷியா, சீனா மற்றும் தென் ஆபிரிக்க நாட்டுத் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்திக்கிறார்.
அத்தோடு, பிரான்ஸ், ஜப்பான், இந்தோனேஷியா, அமெரிக்கா மற்றும் துருக்கி உட்பட 10 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
