கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய பெண் துப்புரவு பணியாளர் ஒருவர் தங்க ஆபரணங்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.இரண்டு கிலோ 187 கிராம் நிறையுடைய தங்க ஆபரணங்களுடன் குறித்த பெண், இன்று (சனிக்கிழமை) கைதுசெய்யப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்தார்.
பெண் ஊழியர் தங்க ஆபரணங்களை விற்பனை செய்வதற்கு முயன்ற போது விமான நிலையத்தின் பாதுகாப்பு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட தங்க ஆபரணங்களின் பெறுமதி சுமார் 11.5 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. விமான பயணியொருவரால் தங்க ஆபரணங்கள் குறித்த ஊழியருக்கு வழங்கப்பட்டுள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுவருவதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன மேலும் தெரிவித்தர்.








