கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தக் கோரியஉண்ணாவிரதப் போராட்டத்தில் 1000 தீபங்கள் ஏற்றப்பட்டு இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த 1000 தீபங்கள் ஏற்றும் நிகழ்வில் கல்முனையில் உள்ள இளைஞர்கள், ஆலயங்களின் தர்மகர்த்தாக்கள், கிறிஸ்தவ பாதிரியார்கள், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், பொது அமைப்புகள் மற்றும் மக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்துக்கு உரிய முறையில் காணி, நிதி அதிகாரங்களை பெற்று இயங்க நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் தங்களது உச்ச அதிகாரங்களைப் பயன்படுத்தி பெற்றுத்தர வேண்டுமென உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகின்றது.
கல்முனை மக்களின் நியாமன நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றவேண்டும் என போராட்டக்கார்கள் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





