காவின் நடவடிக்கை ஆபத்தான முன்னுதாரணம் என, ஹூவாவி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹூவாவி நிறுவனத்தின் சட்ட ஆலோசகர் சோங் லியுபிங் இதனைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, எதிர்காலத்தில் ஏனைய நிறுவனங்கள் மீதும் மேற்கொள்ளப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா, சீனாவின் ஹூவாவி நிறுவனத்தை அண்மையில் வர்த்தக கறுப்புப் பட்டியலில் இணைத்ததுடன் அமெரிக்க மற்றும் சீனாவுக்கு இடையிலான மோதலின் ஒரு பகுதியாக இந்த வர்த்தகத் தடை காணப்படுகின்றது.
இதற்கமைய, அமெரிக்க அரசாங்கத்தின் அனுமதியின்றி அமெரிக்க நிறுவனமொன்றின் தொழில்நுட்பத்தை பெற்றுக் கொள்வதற்கு ஹுவாவி நிறுவனத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.






