
கொன்சர்வேற்றிவ் கட்சி தலைவர் பதவியிலிருந்தும் பிரதமர் பதவியிலிருந்தும் வரும் ஜூன் 7 ஆம் திகதி விலகுவதாக பிரதமர் தெரேசா மே சற்று முன்னர் அறிவித்துள்ளார்.
தெரேசா மே-யின் பதவி விலகல் குறித்து கருத்து தெரிவித்துள்ள கொவேனி, தெரேசா மே-க்கு வழங்கப்பட்ட உடன்படிக்கையை விட வேறுபட்ட ஒன்றை புதிய பிரதமருக்கு ஐரோப்பிய ஒன்றியம் வழங்காது என தெரிவித்துள்ளார்.
மேலும் தெரேசா மே-யுடன் எட்டப்பட்ட பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை மீண்டும் புதிய பிரதமருடன் பேச்சுவார்த்தைக்கு உட்படுத்த முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
