கல்ஹரியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த சாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கல்ஹரியில் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற விபத்தில் சாரதி ஒருவர் படுகாயமடைந்திருந்தார்.
கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்தமை காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றிருந்தது.
இந்தநிலையில் குறித்த விபத்தில் படுகாயமடைந்த காரின் சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
விபத்து குறித்து வழக்குப் பதிவுசெய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





