பிரதமர் நரேந்திர மோடியின் பதிவியேற்பு விழாவில்பங்கேற்குமாறு புல்வாமா தாக்குதலில் உயிரிழந்துள்ள இராணுவத்தினரின் குடும்பத்தினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நரேந்திர மோடியின் பதவியேற்பு விழா இன்று (வியாழக்கிழமை) குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறவுள்ளது.
இவ்விழாவில் பங்களாதேஷ், இலங்கை, கிர்கிஸ்தான், மொரீஷியஸ், நேபாளம், மியன்மார், மாலைத்தீவு, பூட்டான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்நிலையில், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த இராணுவத்தினரின் குடும்பத்தினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறித்து அரசியல் விமர்சகர்கள் பலர் சமூக வலைதளங்களில் கேள்வியெழுப்பியுள்ளனர்.
கடந்த 5 வருடங்களில் 1000திற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களின் குடும்பத்தினருக்கு ஏன் அழைப்பு விடுக்கப்படவில்லை என அரசியல் விமர்சகர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.





