பூர்ணிமா தினத்தன்று தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக வெளியாகிய செய்தியை தொடர்ந்து வங்கதேசம் மற்றும் மேற்குவங்கத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.ஜமாத் உல் முஜாகிதீனோ அல்லது ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பு தற்கொலை தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இவ்விடயம் குறித்து மேற்குவங்கம் மற்றும் வங்கதேசம் அரசுகளுக்கு உளவுத்துறை அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
ஆகையால் அம்மாநிலங்களிலுள்ள சமய வழிபாட்டுத் தலங்கள், மக்கள் கூடும் பொது இடங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.





