
அத்துடன் சுயமரியாதையும் அரசியல் நடைமுறையும் ராகுலின் ராஜினாமாவைக் கோருகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2019 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி 348 தொகுதிகளைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ.க. மட்டுமே 303 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் 52 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 90 தொகுதிகள் கிடைத்துள்ளன.
இந்நிலையில் காங்கிரஸ் தோல்வி குறித்து ராமச்சந்திர குஹா தனது டுவிட்டர் பக்கத்தில், “காங்கிரஸ் தோல்விக்குப் பொறுப்பேற்று ராகுல் காந்தி இன்னும் தலைவர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யாதது ஆச்சரியமளிக்கிறது.
சுயமரியாதையும் அரசியல் நடைமுறையும் ராகுலின் ராஜினாமாவைக் கோருகிறது. காங்கிரஸ் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேவையை உணர்த்துகிறது.
ஆனால், காங்கிரஸுக்கு சுயமரியாதையும் இல்லை. அரசியல் நடைமுறை தெளிவும் இல்லை என நினைக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
ராமச்சந்திர குஹா, ஜவஹர்லால் நேரு மீது மிகுந்த பற்று கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்க
