ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலை நடத்தியோரின் படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
கடந்த மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் 250 ற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததுடன் சுமார் 500 ற்கும் மேற்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நாடு முழுவதும் இராணுவம், பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் இணைந்து பல்வேறு சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில், இதுவரை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் 150க்கும் மேற்பட்ட சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அவர்களில் 44 சந்தேகநபர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பெண் உட்பட 16 பேர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
- சங்ரில்லா ஹோட்டல் – மொஹம்மட் காஸீம் மொஹம்மட் ஸஹ்ரான்,
- சங்ரில்லா ஹோட்டல் – மொஹம்மட் இப்ராஹிம் இல்ஹாம் அஹமட்,
- சினமன் கிரேன்ட் ஹோட்டல்- மொஹம்மட் இப்ராஹிம் இன்ஸாப் அஹமட்,
- கிங்ஸ் பெரி ஹோட்டல் – மொஹம்மட் அஸாம் மொஹம்மட் முபாரக்,
- புனித செபஸ்டியன் தேவாலயம் கட்டுவாப்பிடிய நீர்கொமும்பு – ஹச்சி மொஹம்மட் மொஹம்மட் ஹஸ்துன்,
- புனித அந்தோனியார் ஆலயம் கொச்சிகடை – அலாவுதீன் அஹமட் முவாத்,
- சீயோன் தேவலயம் மட்டக்களப்பு – மொஹம்மட் நஸார் மொஹம்மட் அஸாத்,
- தெஹிவளை – அப்துல் லதீப் ஜமீல் மொஹம்மட்,
- தெமட்டகொட – பாதிமா இன்ஹாம்