
வடமேல் மாகாணத்தில் குறிப்பாக குருணாகல், புத்தளம் மாவட்டங்களில் குளியாபிட்டி, நிக்கவரட்டி மற்றும் சிலாபம் ஆகிய பிரதேசங்களில் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன.
இந்நிலையில் தற்போது வன்முறைச்சம்பவங்கள் கட்டுப்படுத்தப்பட்டு, நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.
இதையடுத்து, பாதுகாப்பினை கருத்திற்கொண்டு முடக்கப்பட்டிருந்த சமூக வலைத்தளங்கள் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளன.
