
அந்தவகையில், காசி விஸ்வநாதர் ஆலயத்தில் வழிபாடு செய்யும் மோடி, நாளை (திங்கட்கிழமை) முழுவதும் இந்த தொகுதியில் பிரசார கூட்டங்கள் மற்றும் சில முக்கிய வீதி வழியாக திறந்த வாகனத்தில் பேரணியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளார்.
கடந்த 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் குஜராத் மாநிலத்தின் வதோதரா மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் நரேந்திர மோடி இந்தமுறை வாரணாசி தொகுதியில் மட்டும் போட்டியிட்டார்.
இந்த தேர்தலில் பிரதமர் மோடி 6 இலட்சத்து 74 ஆயிரத்து 664 வாக்குகளை வாங்கி, 4 இலட்சத்து 79 ஆயிரத்து 505 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இரண்டாவது இடத்தைப் பிடித்த சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் ஷாலினி யாதவ் ஒரு இலட்சத்து 95 ஆயிரத்து 159 வாக்குகளை பெற்றார்.
ஒரு இலட்சத்து 52 ஆயிரத்து 548 வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
இதனிடையே, தனிப் பெரும்பான்மையுடன் எதிர்வரும் 30ஆம் திகதி மோடி மீண்டும் பிரதமாராக பதவியேற்கின்றமை குறிப்பிடத்தக்கது.
