LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, May 22, 2019

தேர்தலுக்குப் பின்னரான கருத்துக் கணிப்புக்கள் மோசடி மிக்கவை – ராகுல்

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் மோசடி மிக்கவை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
எனவே, அடுத்த 24 மணிநேரம் மிக முக்கியமானது எனவும் கட்சித் தொண்டர்கள் எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் செயற்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று (புதன்கிழமை) ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.
அவர் தெரிவிக்கையில், “அடுத்த 24 மணி நேரம் மிக முக்கியமானது. விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். மோசடித்தனமான பிந்தைய கணிப்புகள் பற்றி ஏமாற்றமடைய வேண்டாம். உங்கள் மீதும், காங்கிரஸ் கட்சி மீதும் நம்பிக்கை வையுங்கள். உங்கள் முயற்சிகள் வீணாகாது” என்று பதிவிட்டுள்ளார்.
கடந்த 3 நாட்களாக தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகள், தேசிய ஜனதா கூட்டணி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியமைக்கும் என்றும், 300க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றும் என்றும் தெரிவித்துள்ளன. எனினும் இதுகுறித்து ராகுல் காந்தி எதுவும் கூறாத நிலையில் தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டார்.


 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7