
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த குழு குறித்த வைத்தியருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணை அறிக்கையை விரைவில் அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் கையளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, குருநாகல் வைத்தியசாலையின் மகப்பேற்று பிரிவில் பணியாற்றிய வைத்தியர் சிஹாப்டின் மொஹமட் சபிக்கு எதிராக தொடர்ச்சியாக பலரும் முறைப்பாடு செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரை சுமார் 16 பெண்கள் அவர் மீது முறைப்பாடு செய்துள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
குருணாகல், வாரியபொல, கலீவெல, தம்புள்ள, மவதகம, மெல்சிரிபுரா பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
அத்துடன், குறித்த வைத்தியருக்கு எதிராக மேலும் பலர் முறைப்பாடு செய்ய தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
