
சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் அறையில் குறித்த உறுப்பினர்கள் பதவியேற்கவுள்ளதுடன், இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மூத்த அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர்.
அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கு சபாநாயகர் தனபால் பதவியேற்பு பிரமாணமும், இரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கவுள்ளார். அதன் பின்னர் தங்கள் தொகுதிகளுக்கு சென்று மக்கள் நலப்பணிகளை உடனடியாக தொடங்குவார்கள் என்று கூறப்படுகிறது.
22 சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் முடிவுகள் கடந்த 23ம் திகதி வெளியிடப்பட்டிருந்த நிலையில், தி.மு.க 13 இடங்களையும் அ.தி.மு.க 9 இடங்களையும் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
