சுற்றுலாப் பயணிகளுக்கு விடுத்திருந்த பயண எச்சரிக்கையை இத்தாலி தளர்த்தியுள்ளது.
இத்தாலி வெளியுறவுத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் மிகுந்த கவனமாக இருக்குமாறு இலங்கைக்கு வரும் தனது பிரஜைகளுக்கு இத்தாலிய அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
இலங்கையில் தற்போது பாதுகாப்பு நிலைமை சாதாரண நிலைக்குத் திரும்புகின்றது. எனினும் அவசரகால நிலை எதிர்வரும் ஜூன் 21ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என்றும் இத்தாலி விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதேநேரம் இத்தாலிய சுற்றுலாப் பயணிகள் தமது பயணங்களை ஆரம்பிக்கும் முன்னர் உள்ளூர் அதிகாரிகள் மற்றும் ஊடகங்களின் ஊடாக தகவல்களை பெற்றுக்கொள்ளுமாறும் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக சீனா, சுவிட்ஸர்லாந்து, ஜேர்மனி, இந்தியா மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக எச்சரிக்கையை தளர்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.






