
பரப்புரை கூட்டத்தில் முட்டை மற்றும் கல் வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அரவக்குறிச்சி வேலாயதம்பாளையத்தில் கமல்ஹாசன் பங்கேற்ற குறித்த கூட்டத்தில் முட்டை, மற்றும் கல்வீசியவரை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொண்டர்கள் பிடித்து தாக்கியுள்ளனர்.
இதையடுத்து அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் அதிக அளவில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நேற்று இடம்பெற்ற ஒரு பரப்புரைக் கூட்டத்தில் கமல் மீது பாதணி வீச்சுத் தாக்குதலும் இடம்பெற்றிருந்தது.
அண்மையில் அரவக்குறிச்சியில் இடம்பெற்ற ஒரு பரப்புரை கூட்டத்தில் “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து” என கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.
இந்த சர்ச்சைக் கருத்துக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கண்டனங்களும், எதிர்ப்புக்களும் தெரிவிக்கப்பட்ட நிலையில், கமல்ஹாசன் மீது வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
