LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, May 3, 2019

இலங்கை குண்டுவெடிப்பின் தாக்கம் – இந்தியாவில் இருந்து உளவியல் குழு வருகை

இலங்கை குண்டுவெடிப்பின் தாக்கத்தையடுத்து
மாணவர்களின் உளவியல் பலத்தை அதிகரிக்க விசேட திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன்பொருட்டு பாதிக்கப்பட்ட பிரதேச மாணவர்களின் உளவியல் பலத்தை அதிகரிக்கும் நோக்குடன் விசேட குழுவினர் இந்தியாவில் இருந்து இலங்கை வருகை தந்துள்ளதாக  கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

அலரிமாளிகையில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தெரிவிக்கையில், “பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பில் மாத்திரம் நாம் கவனம் செலுத்தவில்லை. தீவிரவாதத் தாக்குதல் காரணமாக அதிகளவிலான சிறுவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று மனதளவில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

எனவே பாதிக்கப்பட்ட பிரதேச மாணவர்களின் உளவியல் பலத்தை அதிகரிக்கும் நோக்குடன் விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்காக விசேட குழுவினர் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இதன்போது மனோவியல் ஆலோசனைகள் குறித்து விசேட அவதானம் செலுத்தப்படும். இந்த வேலைத்திட்டம் பயிற்சிபெற்ற அதிகாரிகள் மூலம் முன்னெடுக்கப்படும்.

அத்துடன், தீவிரவாத தாக்குதலின் காரணமாக பல சிறுவர்கள் உயிரிழந்தனர். அதுமாத்திரமின்றி பலர் காயமடைந்தனர். எனவே பாடசாலை மாணவர்களின் பாதுகாப்புக்காக சுரக்சா காப்புறுதி திட்டத்தை நாம் ஆரம்பித்துள்ளோம்.

இதன்படி இவ்வருடத்திற்கான காப்புறுதி பிரதிலாப தொகை அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆகவே தீவிரவாதத் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் சுரக்சா காப்புறுதியின் பயன்களை முழுமையாக பெற்றுக்கொள்ள முடியும். மாணவர் ஒருவர் உயிரிழக்கும் பட்சத்தில் காப்புறுதியின் ஊடாக 2 இலட்சம் ரூபாய் பெற்றுக்கொள்ள முடியும். எனவே தேவையுள்ள மாணவர்கள் உடன் விண்ணப்பிக்க வேண்டும்.

பாதுகாப்பு பிரிவின் பூரண உடன்பாட்டை பெற்றதன் பின்னர் எதிர்வரும் 6ஆம் திகதி அனைத்து பாடசாலைகளும் மீண்டும் ஆரம்பிக்கப்படும்.

பாடசாலை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முகமாக 18 விடயங்களை உள்ளடக்கிய விசேட சுற்றுநிருபமும் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

முப்படைகளினதும் உளவு பிரவினதும் ஆலோசனைகளை செவிமடுத்த பின்னரே தீர்மானம் எடுக்க வேண்டும். அதற்கு மாற்றாக எம்மால் எந்தவொரு தீர்மானமும் எடுக்க முடியாது.

பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கும் போது பாதுகாப்புடன் கூடிய இடமாக பரிசோதனைகளின் பின்னர் உறுதிப்படுத்துவதாகவும் பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட பின்னரும் உரிய பாதுகாப்பினை வழங்க வேண்டும் என முப்படை பிரதானிகளிடம் வாய்மூலமாகவும் எழுத்து மூலமாகவும் கோரியுள்ளேன். மேலும் கத்தோலிக்க பாடசாலைகள் மீளவும் ஆரம்பிக்கப்படுவது குறித்து பாதுகாப்பு பிரதானிகளுடனும் கொழும்பு பேராயருடனும் கலந்துரையாடவுள்ளேன்” என்று தெரிவித்தார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7