
இதனையடுத்து விடுதி மாணவர்கள் வரும் 21ஆம் திகதி விடுதிகளுக்கு வருமாறும் அழைக்கப்பட்டுள்ளனர்.
பதிவாளர் வி.காண்டீபன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அந்தவகையில், கலைப் பீடம் (இராமநாதன் நுண்கலைப் பீடம் உட்பட), விஞ்ஞான பீடம், முகாமைத்துவ மற்றும் வணிக பீடம், விவசாய பீடம், பொறியியற் பீடம், தொழில்நுட்ப பீடம், ஆகிய பாடங்களுக்கும் சித்த மருத்துவ அலகுக்குமான கல்வி நடவடிக்கைகளே எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.
அத்துடன், கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி முதல் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகளில் மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய பீடங்கள் அனைத்துக்குமான பரீட்சைகள் எதிர்வரும் 27ஆம் திகதி திங்கட்கிழமையிலிருந்து ஆரம்பமாகி நடைபெறவுள்ளன.
மேலும், விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களை எதிர்வரும் 21ஆம் திகதி திரும்புமாறும், விடுதிகளின் உள்ளேயும், பல்கலைக்கழகத்தின் சகல பகுதிகளிலும் மாணவர்கள் தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்ட அடையாள அட்டை அல்லது ஆவணம் ஒன்றினை எடுத்துவரவேண்டும் என்றும் பதிவாளர் தனது அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளார்.
