
வவுனியா, பட்டக்காடு பகுதியில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் தக்வா பள்ளிவாசலில் அதன் தலைவர் எ.ஆர்.எம் லரீப் தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை விசேட பிரார்த்தனை இடம்பெற்றது.
நாட்டில் சமாதானம் ஏற்பட்டு தமிழ், முஸ்ஸிம், சிங்கள மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் இப்பிராத்தனை மேற்கொள்ளப்பட்டது.
இப்பிரார்த்தனையில் வவுனியா நகர பள்ளிவாசல் நிர்வாகிகள், பண்டானீச்சூர் ஜூம்மா பள்ளிவாசலின் நிர்வாகிகள், பட்டக்காடு ஜூம்மா பள்ளிவாசலின் நிர்வாகிகள் என வவுனியாவிலுள்ள பெரும்பாலான பள்ளிவாசல்களின் நிர்வாகிகள் மற்றும் கிராமத்திலுள்ள பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
